
எதிர்வரும் நவம்பர் 21- 27 ஆம் திகதி வரையான மாவீரர் வாரத்தினை முன்னிட்டும் நவம்பர் – 27 மாவீரர்நாள் நினைவேந்தலை முன்னிட்டும் ஆயத்தப்பணிகள் கோப்பாயில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாகவுள்ள தனியார் காணியினைத் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி, #ஸ்ரீலங்கா_இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு, துயிலும் இல்லக்காணி சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னால் அமைந்துள்ள தனியார் காணியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்கும் வகையில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் இத்துப்பனபுரவாக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன.


