மட்டு சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட கஜேந்திரன் எம்பிக்கு அனுமதி மறுப்பு!

0
337

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸிற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் சூழ்நிலையை காரணம் காட்டிஅதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மே 19 நினைவேந்தலை முன்னெடுத்தமைக்காக பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இங்கே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் புகைப்படங்களை பயன்படுத்தியமைக்காக கைதுசெய்யப்பட்டவர்களும் இங்கே உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த குடும்பங்கள் மத்தியிலேயே இவர்கள் தொடர்பில் ஆழமான கவலை காணப்படுகின்றது ,அவர்கள் போதிய கொவிட் பாதுகாப்பு இல்லாமல், நெருக்கமான இடங்களிலே, தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் மத்தியில் அச்சம் பரவியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வருகை தந்து இங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் தற்போதுள்ள கொவிட் சூழல்காரணமாக கைதிகளை பார்வையிட முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக தங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மே 19 நினைவேந்தலை முன்னெடுத்தமைக்காக பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இங்கே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் புகைப்படங்களை பயன்படுத்தியமைக்காக கைதுசெய்யப்பட்டவர்களும் இங்கே உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த குடும்பங்கள் மத்தியிலேயே இவர்கள் தொடர்பில் ஆழமான கவலை காணப்படுகின்றது ,அவர்கள் போதிய கொவிட் பாதுகாப்பு இல்லாமல், நெருக்கமான இடங்களிலே, தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் மத்தியில் அச்சம் பரவியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆகவே அவர்கள் என்ன நிலையிலே உள்ளனர் என்பதை பார்வையிடுவதற்காக வந்திருக்கின்றோம் ஆனால் துரதிஸ்டவசமாக கொவிட்டினை காரணம் காட்டி அந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.புகைப்படங்களை பயன்படுத்தியவர்களும்,முள்ளிவாய்க்காலில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் கொல்லப்பட்ட தங்கள் உறவினர்களை நினைவுகூர்ந்தவர்களும் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை என்பது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என நாங்கள் பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.உலகலாவியரீதியில் கொவிட் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற இந்த சூழலில் கூட அரசாங்கம் தமிழர்களிற்கு எதிரான அரசியல் பழிவாங்கலை நிறுத்தாமல் வேண்டுமென்றே தமிழர்களின் ஜனநாயக குரலை நசுக்காமல் இறந்த உறவுகளை நினைவுகூர்ந்தவர்களை கூட கைதுசெய்து சிறையில் அடைக்கும் ஈவிரமக்கமற்ற மிலேச்சத்தனமான ஒரு செயற்பாட்டை ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்;ச்சியாக செய்துகொண்டிருக்கின்றது.சர்வதேச சமூகமும் இது தொடர்பில் அமைதியாக வாய்மூடி மௌனமாகயிருப்பது என்பது வேதனைக்குரிய விடயம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here