வரலாற்றுப் படைப்புக்களைப் பாதுகாப்போம் – தமிழீழ விடுதலைப் புலிகள்!

0
1045

தமிழீழ    விடுதலைப்போராட்டத்தின்    தியாகங்களையும்    எழுச்சிகளையும் வெளிப்படுத்தியஉணர்ச்சிமிகுபடைப்புக்களில் மாற்றம்செய்யும்  செயல் என்பது எமது போராட்ட வரலாற்றை அழிக்கும் செயலுக்கு ஒப்பானது.எமது தாயகவிடுதலைப்போராட்டம் செயற்கரிய உன்னத உயரீகங்கள் ஊடாக இந்த  உலகம்  வியந்துபோகும்  அளவிற்குப்  பெருவளர்ச்சி  கண்டுள்ளது. இப்பெருவளர்ச்சியின்     வல்லமைகளாய்     திகழ்பவர்கள்     மாவீரர்கள்.

தாயகத்தினதும் தாயக மக்களினதும் விடிவிற்காகத் தங்களின் இன்னுயிர்களைக் கொடையாக்கிச்  சென்ற  இம்மாவீரர்கள்  எமது  தேசவிடுதலை  வரலாற்றின் அழியாதபடிக்கற்கள்.   2009   மே   18இல்   எமது   ஆயுதப்போர் அமைதியடைந்தபோதும்,  எமது  தேசத்தினதும்  மக்களினதும்  விடுதலையுணர்வு எமது  மனங்களில்  நிறைந்திருக்கிறது.  மாவீரர்களினதும்,  தேசவிடுதலைப்போரில் சாவடைந்த  மக்களதும்  விடுதலைக்  கனவை  நனவாக்கவேண்டிய  பொறுப்பு தமிழ்மக்கள் அனைவருக்கும் உரித்தானது.

செந்நீரும் கண்ணீரும் இறைத்து, உயிர் ஒப்புவிப்புகளோடு கட்டிவளர்க்கப்பட்ட எமது  போராட்டத்தின்  வரலாறு,  திரிபுகள்,  புனைவுகள்  ஏதுமற்று  காலத்தின் சாட்சியாக   எம்   அடுத்தடுத்த   தலைமுறையினருக்குக்   கடத்தப்பட்டுக் கையளிக்கப்படவேண்டும்    என்பதே  எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது  எண்ணம்.  அதனாலே  தான்  வரலாறு  எனது வழிகாட்டி என அவர் உரைத்துள்ளார்.

அண்மைக்காலத்தில் எமது உண்மையான வரலாற்றிற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில்  சில நிகழ்வுகள்  நடைபெறுவது  வரலாற்றை  நேசிக்கும்  மக்களுக்கு மிகுந்த மனத்துயரையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  குறிப்பாக,‘‘இந்தமண்  எங்களின்  சொந்த  மண்”  ஒலிப்பேழையில்  வெளிவந்த இந்தமண் எங்களின்  சொந்த  மண் எனும்  பாடல், இந்தப்  பாடல்  தயாரிப்பில் எந்தவித  தொடர்புமற்ற  ஒரு  சிலரால்  உருச்சிதைப்பு  செய்யப்பட்டு, இசையை மாற்றுவது வரலாற்றுக்கு ஏற்படுத்தும் களங்கமாகவே அமையும்.

எனவே,  அன்பானவர்களே  எமது  தேசவிடுதலைக்கான  கலைப்பயணத்தை முன்னெடுக்கும்  அனைவருக்கும்  எமது  ஒத்துழைப்பையும் உற்சாகமூட்டலையும் நாம்   தொடருவோம்.   ஆனால்,   யாரும்   விரும்பியோ, அறியாமலோ தாயகவிடுதலை  வரலாற்றை  களங்கப்படுத்தும்  செயல்களில்  ஈடுபடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.‘‘

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கலைபண்பாட்டுக் கழகம்,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here