பிரித்தானியாவில் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டம்!

0
401

பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்.

அம்பிகை செல்வகுமார் என்ற தமிழ்ப் பெண்மணி நேற்று 27ஆம் திகதி சனிக்கிழமை மதியம் 12 மணியில் இருந்து சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மீண்டும் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கி இலங்கையின் நீதியற்ற உள்ளூர் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்துப் போகச் செய்யும் அதேவேளை தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை இலங்கை பேரினவாத அரசு தொடர்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் இலங்கை குறித்து இணைத் தலைமை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன் வைக்கவுள்ள செய்தி உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும், மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக தாயகத்தில் வீதிகளில் இறங்கி நீதிக்காக போராடிவரும் எமது தாய்மார்கள், குழந்தைகள், மற்றும் குடிசார் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எமது உறவுகள் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அம்பிகை, எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனித நேயத்தோடு சாகும் வரையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை தான் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here