லண்டனில் நேற்று 2வது நாளாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

0
651

லண்டனில் நேற்று 12.05.19 – 2வது நாளாக 10 Downing street ல், எமது மக்களால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. ஈகைச் சுடரை திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

இந்த வரலாற்றுக் கடமையில், அனைத்துத் தமிழ் மக்களும் அணியணியாகத் திரண்டு வந்து, எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகத்திற்கு எடுத்துச் சொல்லி, அதற்கான நீதியை வேண்டி நிற்போம்.இன்று அடையாள உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளானசுயீவன், ஈசன், தனு, டெனிஸ்வினி, சுரேகா, சசிமிலானி, லோகவிந்தன், அகிலன், நிசாந்தன், அரவிந்தன், தயாகரன், கோகிலன், லோகநாதன், கோபிகா, குகநேந்திரன், பிரபா, குயிபாலன், சகாயராஜ், பாலகிருஷ்ணன், ஜீவதர்சினி, வித்யா, அன்ரனி லெவின்டர், லக்சன் ஆவார்கள்.

May 18 2019 அன்று எமது தேசிய உணர்வை வெளிப்படுத்துவோம் @ 2 pm, Green park station இருந்து parliament square வரை பேரணி நடைபெறும், அத்தோடு parliament squareல் எழுச்சி ஒன்று கூடல் நடைபெறும் பிரித்தானிய மண்ணில் 2வது நாளாகத் தொடரும் அடையாள உண்ணாவிரதம். எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம். என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவமாய் தமிழீழம் நோக்கி தொடர்ந்தும் பயணிக்கின்றோம். என்ற செய்தியை உலக அரங்கில் உரத்துக் கூறும்முகமாகவும், முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு நீதிகேட்டும், 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலே கொள்ளப்பட்ட எம் உறவுகளை நினைவுகூர்ந்தும் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி வாரமானது நேற்றுமுன்தினம் 11.05.2019 சனிக்கிழமை தொடங்கி நேற்று இரண்டாவது நாளாகத் தமிழீழ உணர்வாளர்களால் சுழற்சிமுறையிலா அடையாள உண்ணாவிரதம் காலை 10 மணிக்கு ஆரம்பித்திருந்த நிலையில் மாவீரர்களின் சகோதரர் உருத்திராபதி சேகர் அவர்கள் எழுச்சி உரை வழங்கியதோடு உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களுக்கு பழச்சாறு வழங்கி நேற்றைய உண்ணாவிரதத்தினை மாலை 6 மணிக்கு நிறைவுக்கு கொண்டுவந்தார். பல்லாயிரக்கணக்கான எம் உறவுகளின் இரத்தம்படிந்த முள்ளிவாய்க்கால் மண்ணும் நந்திக்கடல் நீரும் மரியாதை வணக்கத்துக்குரிய ஈகைச்சுடருக்கு அருகில் வைக்கப்பட்டு எழுச்சிகொள்ளப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here