பிரான்சில் பாரிய பனிப் பொழிவு எச்சரிக்கை!

0
19

தொடர்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பரிசும் அதன் புறநகர்ப் பகுதியும் நேற்றைய தினம் இடம் பெற்ற பனிப் பொழிவால் பொதுப் போக்குவரத்துக்கள் பாதிக்கப் பட்டிருந்ததுடன், பிரதான வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து பார ஊர்த்திகளின் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
இன்று (08) காலநிலை எதிர்மறை 8 (-8) பாகை வரை சென்றிருந்தது. இதனால் 300 வரையான பேருந்து வழித் தடங்கள் தடைப் பட்டுள்ளன. பாதகமாக காலநிலை நிலவுவதால் வாகனங்களில் பயணிப் போர் தங்கள் வாகனங்களில் செல்வதை தவிர்க்குமாறு அறிவிக்கப் பட்டுள்ளது. இன்று இரவு 20.00 மணிவரை பார ஊர்திகள் பயணிப்பது தடை செய்யப் பட்டுள்ளது. இதே வேளை நாளை (09) பனிப் புயல் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here