மழை வெள்ளம் பாடசாலைகளுக்கு விடுமுறை – பொதுப் போக்குவரத்து தடை!

0
31

பிரான்சில் தொடரும் மழை வெள்ளம் காரணமாக சில பகுதிகளில் உள்ள பாடசாலைகள் இயங்கவில்லை. 15 பிராந்தியங்களுக்கு தொடர்ந்து செம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது  பரிசின் சுற்றுவட்டத்தில் உள்ள சென் நதியின் நீர் மட்டம் அதிகரித்துச் செல்வதால் Javel et Paris-Austerlitz. இடையேயான RER C தொடருந்து போக்குவரத்து எதிர்வரும் 31 ம் திகதிவரை நிறுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக பல பேருந்து போக்குவரத்துக்களின் சேவைகள் பாதை மாற்றி இடம் பெறுகின்றன.
2016 ஆம் ஆண்டு யூன் மாத் இடம் பெற்ற வெள்ளப்பெருக்கின்போது செயின் நதியின் நீர் மட்டம் 6.10 மீற்றர் உயரத்தை எட்டி இருந்தது. இந்த வார இறுதியில் நீர்மட்டம் 6.10 மீற்றருக்கும் அதிகமாகலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here