ஊவா மாகாண சபை உறுப்பினர் மீது தாக்குதல் இருவர் வைத்திய சாலையில் அனுமதி !

0
156


ஊவா மாகாண சபை அமர்வு இன்று இடம்பெறவிருந்த நிலையில், கட்சிதாவிய மாகாணசபை உறுப்பினரான கணேசமூர்த்தி மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஆர்.எம். ரத்னாயக்கவின் வாகனத்தில் ஏறி சபைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மாகாண சபையின் புதிய கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ள செந்தில் தொண்டமானை கௌரவிக்கும் முகமாக ஊவா மாகாண சபையில் பொதுமக்கள் கூடியிருந்துள்ளனர்.
ஊவா மாகாண சபைக்குள் கட்சிதாவிய கணேசமூர்த்தி உள்நுழைகையில் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, அங்கு நின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரான உபாலி சேனாரத்ன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து ஊவா மாகாணசபை வளாகத்தில் கலகமடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், சபை அமர்வு ஆரம்பமானதும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரொருவர் தாம் சபைக்கு வருவதற்கு பாதுகாப்பு இல்லையெனவும் இராணுவத்தினருடன் தான் சபைக்கு வரவேண்டுமெனவும் தெரிவித்தார்.
அதையடுத்து புதிதாக மாகாணக் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செந்தில் தொண்டமானும் தமக்கு சபைக்கு வருவதற்கு பாதுகாப்பு வழங்குமாறும் சபையில் தெரிவித்தார்.
இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த முதலமைச்சர் இது தொடர்பில் தான் சட்டபூர்வமான நடடிவக்கை எடுப்பதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறினார்.
சம்பவம் நடந்ததை கேள்வியுற்று அப்பகுதிக்கு விரைந்த அமைச்சர் ஹரீன்பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் ஊவா மாகாண சபையில் கூடியிருந்த பொதுமக்களுடன் சந்திப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here