நீதிக்காக ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம் ! தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

0
637

 

அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உபகட்டமைப்புக்களினதும், தமிழர் புத்தாண்டு பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
ஓயாத புயலாக ஒடுக்கு முறையின் கோரத்தாண்டவம் விடுதலைப்பாதையில் எம்மைத்தள்ளி விட்டது. இன அழிப்பின் தாங்க முடியாத நெருக்குவாரங்களின் விளைவாக, எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கத் தீர்மானித்தோம். விடுதலை பெற்ற மனிதர்களாக வாழ்வதற்கு முடிவு செய்து கொண்டோம்.
விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை, வரலாறு தான் அதை எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டுவைக்கவில்லை. தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்குத் தொடர்ந்து வலுச்சேர்ப்போம்.
ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைப் பேரவையின் 37 வது கூட்டத்தொடரில் மார்ச் மாதம் 21ம் நாள் சிறீலங்கா தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையாளர் செயிட் அல்சைன் சிறீலங்கா தொடர்பான தனது அதிருப்தியைத் தெரிவிப்பார் என்று அனைத்துத்தரப்பினாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை மறுதலிக்கும் வகையில் பெப்ரவரி 26ம் திகதி முதல் மார்ச் 23ம் திகதி வரை நடைபெறவுள்ள மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் உயர் மட்டக்குழுவினரும், சட்டமா அதிபரின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வதுடன் நல்லாட்சி அரசானது தமிழ் மக்களுக்கு பல்வேறு விடயங்களைச் செய்துள்ளது என்றும், சட்டமாதிபர் திணைக்களத்தின் மூலம் நாட்டில் நீதி நிர்வாகம் சரியாகவே செய்யப்படுகின்றது என்பதை நிறுவிப்பதோடு சிறீலங்கா அரசானது மேலும் கால அவகாசத்தை பெற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டை எடுக்கவுள்ளதையே அரசியல் அவதானிகளின் தெரிவித்துள்ளனர்.
சர்வதேசத்தின் துணையுடனும், சிறீலங்காவுக்கு துணைபோகும் நாடுகளின் துணையுடன் தமிழீழ மக்களின் ஆயுதப்போராட்டம் அமைதியாக்கப்பட்டு ஒன்பது வருடங்களாகியும், சர்வதேசம் எதிர்பார்த்த எதையும் சிறீலங்காவில் இருந்த அரசோ, அல்லது நல்லாட்சி தருவோம் என்று கூறிப் பதவிக்கு வந்த மைத்திரி அரசோ சர்வதேசம் கொடுத்த காலஅவகாசத்தில் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் எந்தவித முன்னேற்றத்தையும் அடையவில்லை என்பதையும், மாறாக தமிழர் வாழ்விடங்களில் புத்த கோவில்களை புதிது புதிதாக அமைப்பதையும், தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி, தமிழ் மக்களின் உணர்வை மதியாது செவிசாய்க்காது இன, மத நல்லிணக்கத்திற்கு பங்கத்தையும், வெறுப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதும், தமிழர் பூர்வீக வாழ்விடமான வடக்கு கிழக்கை பிரிப்பதிலும் முனைப்பு காட்டுவதிலும், வவுனியா பிரதேசத்தையும் தம்வசமாக்கும் கைங்கரியத்தையும் செய்யத் தொடங்கி விட்டதையும் இதற்கு பல தமிழ் தலைமைகள் கண்மூடியிருப்பதும் காலம் கடந்து ஞானம் பெற்றவர்களாக கருத்துக்கள் தெரிவிப்பதும் நாம் நிகழ்கால விடயமாகப் பார்க்கின்றோம்.
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகத்திற்கு முன்பாக முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள மாபொரும் நீதிக்கான பேரணியில் அனைத்துத் தமிழீழ மக்களும் கலந்து கொண்டு பின் வரும் விடயங்களையும் முன்வைத்து பலம்சேர்ப்போம் வாருங்கள்.
• ஐக்கிய நாடுகள் சிறீலங்காவுக்கு எதிராக எடுத்த பிரேரணைகளுக்கு தமிழர்கள் நாம் தொடர்ந்து வலுச்சேர்ப்போம்.
• புலம்பெயர்ந்த தமிழர்களின் அனைத்து நாடுகளிலுள்ள அரசியல் ரீதியான செல்வாக்கினை உரிய முறையில் எமது நியாயத்தின் பக்கம் பயன்படுத்துவோம்.
• தமிழர்கள் எங்கள் புராதனம், வரலாறு, அதன் கண்டுபிடிப்புகளை எங்கள் பலமாக்குவோம்.
• தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசும் , அதன் கூலிப்படை செய்யும் அட்டூழியம், அநியாயத்தையும் எமது நியாயத்தின் காரணமாக்குவோம்.
• சிங்கள அரசின் ஆபத்தான பொருளாதார நிலையும், அதனால் வெறுப்படையும் உலக வல்லரசுகளின் மனோ நிலையும், சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன மாற்றமும் விரக்தி நிலையையும் எமக்கு சாதகமாக்கிக் கொள்வோம்.
• சொந்த வாழ்விட மண்ணை இழந்து, காணமல் ஆக்கப்பட்ட சொந்த உறவுகளைத்தேடி 300 நாட் களையும் தாண்டி சனநாயக அரசியல் வளியில் பேராடும் எமது மக்களின் அபிலாசைகளை ஏறெடுத்தும் பார்க்காத சிங்களப் பேரினவாதிகளினதும், அரசினதும் உண்மைத்தோற்றத்தை உலகிற்கு எடுத்துச்சொல்வோம்.
• 70 வருடங்களாக எமது உரிமைகளை இழந்து நாம் வாழ்ந்து விட்டோம்.
எமக்கான சுயநிர்ணய உரிமையைக் கிடைக்கத் தொடர்ந்தும் ஓங்கிக் ஒன்றாய்க் குரல் கொடுப்போம்.
ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகம் முன்பாக முருகதாசு திடலில் 12.03.2018 திங்கட்கிழமை 14.00 மணிக்கு நடைபெறும் மாபெரும் நீதிக்கான பேரணியில் பாரிசிலிருந்து TGV தொடரூந்து காலை 9.00 மணிக்கு புறப்பட்டு 12.30 மணிக்கு ஜெனீவா சென்றடைந்து, பேரணி முடிவடைந்த பின் மாலை 18.00 புறப்பட்டு 21.30 மணிக்கு பாரிசை வந்தடையும். காலத்தின் தேவையுணர்ந்து இளையவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளுவோம் வாருங்கள்.
‘ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்’

மேலதிக தொடர்புகளுக்கு :-

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு – 01 43 15 04 21
தமிழ் மக்கள் பேரவை – 06 52 72 58 67
தமிழ்ச் சங்கங்களின்; கூட்டமைப்பு – 06 62 84 66 06

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here