322 ஆவது நாளாக தொடரும் நிலமீட்புப் போராட்டம் !

0
304


கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் சிறீலங்கா இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் கடந்த 28 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.
கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணியில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டநிலையில் 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து இன்று (16) 322 ஆவது நாளாகவும் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமக்கு எதுவித உதவியையும் சிறீலங்கா அரசாங்கம் செய்யவில்லை என அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதேவேளை கேப்பாபுலவில் ஒரு பகுதியை மட்டுமே விடுவித்து தமக்கு சிறீலங்கா அரசாங்கம் வஞ்சகம் செய்துவிட்டதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here