மஞ்சல் விரட்டு விளையாட்டு கிளிநொச்சியில் இடம்பெற்றது !

0
203

ஜல்லிக் கட்டு போன்று மஞ்சல் விரட்டு பாரம்பாரிய விளையாட்டாக இடம்பெற்று வந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலும் யுத்தத்திற்கு முன் பல கிராமங்களில் மஞ்சல் விரட்டு விளையாட்டு இடம்பெற்று வந்தது.
பின்னர் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் உழவர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு இடம்பெறுகின்ற மஞ்சல் விரட்டு இடம்பெறாது இருந்த நிலையில் இவ்வருடம் மீண்டும் மஞ்சல் விரட்டும் நிகழ்வு கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேச இளைஞர்களால் நடத்தகப்பட்டுள்ளது.
தாங்கள் வளர்க்கும் மாடுகளில் தெரிவு செய்யப்பட்ட ஒன்றின் கழுத்தில் துணி ஒன்றில் பணம் அல்லது பிடிக்கப்படும் மாட்டின் உரிமையாளரால் தனது மாட்டை பிடித்து கழுத்தில் கட்டப்பட்ட துணியை கழற்றினால் இவ்வளவு தொகை பரிசு என அறிவிக்கப்பட்டு மாடுகள் வெடிகொளுத்தி விரட்டப்படும், விரட்டப்படும் மாடுகளை இளைஞர்கள் மடக்கி பிடிக்க வேண்டும் இதுவே மஞ்சல் விரட்டு விளையாட்டாக இருந்து வருகிறது.
குறித்த இந்த விளையாட்டு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here