வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டித் திருவிழா 2018: போட்டிக்கு 68 வகையான விசித்திர பட்டங்கள்!

0
714

தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் ”பட்டப்போட்டித் திருவிழா 2018” இன்று நடத்தப்பட்டது.
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் ”பட்டப்போட்டித் திருவிழா 2018” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பட்டப்போட்டித் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
போட்டியில் பல்வேறு வடிவங்களைக் கொண்ட 68 வகையான விசித்திர பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here