பிரேசிலில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் உயிரிழப்பு!

0
182

பிரேசிலில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோயாஸ் மாகாணத்தில் உள்ள கலோனியா அக்ரோ இண்டஸ்ட்ரியல் சிறையில் நேற்று (02) கைதிகளுக்கிடையே பயங்கர கலவரம் மூண்டுள்ளது.
இதன்போது வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த கைதிகள் ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
ஒரு பிரிவினர் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் இருந்த மெத்தைகளை தீயிட்டுக் கொளுத்தினர். இதையடுத்து, தீ சிறை வளாகம் முழுவதும் வேகமாகப் பரவியது.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கலவரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த சிறைக் கலவரத்தை சாதகமாக்கிக்கொண்டு 106 கைதிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அவர்களில் 26 பேரை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
இந்த கலவரத்தின் போது தப்பிச்சென்ற 127 கைதிகள் தாமாகவே முன்வந்து சிறைக்கு திரும்பி விட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here