290 வது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் 132 ஏக்கர் காணிகள் விடுவிக்க படும் என்கிறார் அரச அதிபர் !

0
331


முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டத்துக்கு தீர்வாக அவர்களது காணியின் ஒரு பகுதி 132 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 28.12.2017 அன்று வழங்கப்படவுள்ளதாக நில ஆக்கிரமிப்பு செய்துள்ள சிறீலங்கா இராணுவம் அறிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவு மக்கள் கடந்த மாசி மாதம் முதலாம் திகதி 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு ஆரம்பித்த போராட்டம் இன்று 290 ஆவது நாளாக நடைபெற்று வருகிற நிலையில் கண்துடைப்பாக அவர்களது காணியின் 132 ஏக்கர் காணிகள் வழங்கப்படவுள்ளதாக சிறீலங்கா இராணுவம் அறிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here