ஜேர்மனியில் இரண்டு தொடருந்துகள் விபத்து; 50 பேர்வரை காயம்!

0
220

ஜேர்மனியின் மேற்குப் பகுதி டுஸ்ஸெல்டார்ஃப் அருகே இரண்டு தொடருந்துகள் விபத்துக்குள்ளானதில் சுமார் 50 பேர்வரை காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

செய்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் சரக்கு ஏற்றிவந்த தொடருந்தும் பயணிகள் தொடருந்துமே நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றபோதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஜேர்மனியின் மிகப் பிரபலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் Meerbusch-osterath நிலையத்திற்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டது,  விபத்துக்கான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here