தமிழ் மக்கள் நிதானமாக சிந்திக்க வேண்டிய நேரம்!

0
25

மகாகவி பாரதியார் பற்றி அறியாதவர்கள் இல்லை எனலாம். எனினும் அவர் வாழுங் காலத்தில் அவரை அறிந்தவர்கள் மிகச் சொற்பம்.

மனித சமூகம் வாழ வேண்டும் என விரும் பிய ஒரு பெருங் கவிஞன் அவன்.
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியின் வரிகள் அந்த உலகக் கவிஞனின் உள்ளக் கிடக்கையை தெட்டத் தெளிவாக வெளிப்படுத் தியுள்ளது.
சமூக அநீதி கண்டு கொதித்தெழுந்த பாரதி யின் பாடல்கள் சமூகத்தை சீர்படுத்துவன, சமூக நீதியை நிலைநாட்டுவன, ஏழை மக் களுக்கு உதவும் திட்டங்களை முன்னிலைப் படுத்துவன.

இயற்கையை இரசித்து, இயற்கையைப் பாதுகாத்து, இயற்கையில் வாழும் பறவைகள் உள்ளிட்ட அத்தனை ஜீவராசிகள் மீதும் கருணை காட்டுவன.
இப்படியாக பாரதியின் மனப்பதிவுகள் கவி வரிகளாக வெளிவந்ததால்தான், அவன் இன்று உலக மக்களுடன் வாழும் கவிஞனாக நிலை பெற்றுள்ளான்.

பாரதி வாழ்ந்த காலத்தில் அன்றைய சூழ் நிலையில் நிலவிய சமூக அநீதிகள்; அதர் மத்தின் எழுச்சிகள் எங்ஙனம் அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினவோ – துன்பத்தைக் கொடுத்தனவோ அதே நிலைமை ஈழத் தமிழ் மக்கள் தொடர்பில் இப்போது உள்ளது.
ஆம், எங்கள் மக்கள் படும் நிலை கண்டு இன்னமும் மனம் கலங்காதவர்கள் நம் மத்தி யில் இருக்கிறார்கள். காணாமல்போனவர் களின் பெற்றோர்களும் உறவுகளும் தொடர் உண்ணா விரதம் இருக்கும் பரிதாபத்தைக் கண்டும் நெஞ்சு நிமித்தி செல்லும் ஈனர்களை நினைக்கும்போது நெஞ்சம் வெடித்து விடுகிறது.

கொடிய யுத்தத்தில் பெற்ற பிள்ளையை இழந்து தவிக்கும் தாய் தந்தையர், குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் குடும்பங்கள், தாய் தந்தையரைப் பறிகொடுத்துவிட்டு அநா தைகள் என்ற பெயரோடு அன்புக்காக ஏங்கும் குழந்தைகள். அந்தோ எத்தனை அநியாயம் எங்கள் மண்ணில் நடந்துவிட்டன.
இருந்தும் ¼ஹாட்டல்களில் கூடி உண்டு மகிழ்ந்து உறங்கும் தமிழ் அரசியல்வாதிகள் நம் மண்ணில் உள்ளனர் எனும்போது இதயத் துக் குருதி கொதித்து விடுகிறது.

அதிலும் பொதுப்பணி, பொதுச்சேவை என்று தங்களை அடையாளப்படுத்துவோரி லும் பலர் உளவாளிகளாக செயற்படுகின்றனர் என அறியும்போது, கடவுளே இதென்ன கொடுமை என்று கண்ணீர் விடுவதைத் தவிர வேறு எந்த வழியும் தெரியவில்லை.
காட்டிக்கொடுப்புக்களும் தகவல் பரிமாற் றங்களும் சேர்ந்திருந்தே கழுத்தறுக்கும் துரோ கத்தனங்களுமே தமிழனைத் தலைநிமிர விடாமல் தடுத்து நிற்கின்றன என்ற உண் மையை அறிந்த பின்பும் யுத்த வெறிக்கு தாய் தந்தையை இழந்த குழந்தைகள் சிறுவர் இல்லங்களில் குப்புறக்கிடந்து அம்மா அப்பா என்று கண்ணீர் விடும் பரிதாபம் தெரிந்தும் இன்னமும் காட்டிக் கொடுப்போர் எங்களிடம் இருந்தால்,

தமிழ் மக்களுக்கு உதவுவது போன்று நாட கம் நடித்து மக்களை ஏமாற்றுவது என்றால் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் என்ன செய்ய முடியும்?
ஓ! தமிழினமே நீ என்றைக்கு வீறுகொண் டெழுந்து கேள்வி கேட்கிறாயோ; என்றைக்குப் பச்சைத் துரோகிகளுக்குப் பதிலடி கொடுக்கி றாயோ அன்றுதான் உன் இனத்தின் விடிவு சாத்தியமாகும்.

(valampuri)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here