தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்கள் மீது கருசனை இல்லை!

0
209

இலங்கையில் தற்போது இருக்கக்கூடிய தமிழ் மக்களின் நிலைமை மிகவும் மோசமான தாகவுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என் பது இன்றுவரை சாத்தியப்படவில்லை.
மாறாக தீர்வு என்ற விடயத்திலும் பெளத்தத் துக்கு முன்னுரிமை என்பதை ஏற்றுக் கொள்வ தாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித் துள்ளது.

ஆக, சிங்களத் தரப்புகள் சொல்வதற்கெல் லாம் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டக் கூடிய ஓர் அரசியல் தலைமையே தமிழ் மக் களுக்கு வாய்த்துள்ளது எனலாம்.
என்ன செய்வது! ஒரு காலத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் பாராளுமன்றத்தில் எழுந்து நின்று துணிந்து பேசினர். தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்கள் ஆற்றிய உரைகள் தமிழ் மக்களிடம் தமிழின உணர்வைப் பலப்படுத்தியது.
ஆனால் சமகால நிலைமை அதுவல்ல. தமிழ் மக்கள் கேட்பது பிழை. நாம் விட்டுக் கொடுத்துத்தான் போகவேண்டும் என்பதாக எங்கள் அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர்.
சர்வதேசப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வரு கின்றபோதும் தமிழ் மக்களின் அவலநிலையை எடுத்துரைப்பதாக இல்லை.

இன்றைய வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழ் மன்னர்கள் பற்றியோ தமிழர் ஆட்சி இலங்கையில் இருந்தது பற்றியோ எதுவும் இல்லை. சிங்கள வரலாற்றைப் படிப்பதுதான் தமிழ் மாணவர்களின் தலைவிதியாகவுள்ளது.

சிங்களவர்களதும் தமிழர்களதும் வரலா ற்றை உள்ளபடி மாணவர்கள் அறிந்து கொள் வதாகப் பாடப் புத்தகத்தைத் தயாரிக்கும்போது தான் இலங்கையில் எல்லா இனங்களும் சமத் துவத்துடன் வாழ்வதற்கான சூழ்நிலை உரு வாகும்.
ஆனால் இங்கு இலங்கை முழுவதும் சிங் களவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்ததாகவே வரலாறு தரப்படுகிறது.

இதன் காரணமாக தமிழ்-சிங்கள மாணவர் களிடையே இன பேதம் விதைக்கப்படுகிறது. இருந்தும் இந்த நிலைமை குறித்து தமிழ் அரசியல் தலைவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதி களிடமோ அன்றி பாராளுமன்றத்திலோ எடுத் துரைக்கத் தெரியாதவர்களாக உள்ளனர்.
ஒருபுறத்தில் தமிழ் மக்களின் உரிமை பாதிக்கப்படுகிறது. மறுபுறத்தில் தமிழர்களின் வர லாறுகள் மறைக்கப்படுகின்றன.

இந்நிலையில், எங்கள் அரசியல் தலைவர்கள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
சிங்கள இராஜதந்திரி ஒருவர் கூறியது போல, தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக் கள் மீது எந்தக் கருசனையும் இல்லை என்ற கருத்துத்தான் நிறுதிட்டமான உண்மை என்பதை இப்போது முழுமையாக உணரமுடிகின்றது.

ஆம் இன்னும் ஒரு சில மாதங்களில் உள்ளூ ராட்சி சபைத் தேர்தல் வரப்போகிறது. தேர்தல் காலத்தில், அப்பாடா என்ன மாதிரி எல்லாம் எங்கள் அரசியல்வாதிகள் ஆலாவர்ணம் செய்வார்கள் என்பதை தமிழ் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.
இப்படி ஒரு அரசியல் தலைமை நமக்கு இருக்கும்போது ஏதேனும் எங்களுக்குக் கிடைக்கும் என்று நினைப்பது மிகப்பெரும் மடமைத்தனமாகும்.

(valampuri)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here