முல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்! 

0
162

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி  அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33 ஆம் ஆண்டு  நினைவு தினம்  நேற்று  படுகொலை  நடைபெற்ற இடத்தில் நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும்  தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர். 

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா  மற்றும் வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன்,  உறுப்பினரான சத்தியலிங்கம்  ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1984.12.02 ஆண்டு அதிகாலையில் இராணுவ சீருடையில் கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தினர்  ஒதியமலை கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டு  படுகொலை செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here