தமிழரை அழித்த இடத்தில் தங்கப்புதையலை தேடிய சிறீலங்காவிற்கு ஏமாற்றம் !

0
162


பெரும் இன அழிப்பை செய்த சிறீலங்கா அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழரின் சொத்தை தேடி அகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இறுதி யுத்த காலப்பகுதியில் பெருமளவு தங்கம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் அதை தேடுவதில் குறியாக சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருகிறது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை(30.11.2017) குறித்த அகழ்வு மாலை 3 மணிமுதல் இரவு 7 மணிவரை சிறீலங்கா காவல்துறை, விசேட அதிரடிப் படை யினர் மற்றும் இராணுவத்தினர் இணை ந்து முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணை வலைஞர்மடம் எல்லை பகுதியில் இந்த அக ழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதிரடிப்படையினரின் விசேட பாதுகாப்பு க்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்ட நீதி மன்ற பதில் நீதிபதி ரி பரஞ்சோதி முன்னிலை யில் இந்த அகழ்வு நடவடிக்கை ஆரம்பமாகியது.
குறித்த பிரதேசத்தில் விடுதலைப்புலிகளால் நூற்றுக் கணக்கான கிலோகிராம் தங்கம் புதைக் கப்பட்டிருப்பதாகவும் ஆயுதங்கள் புதைக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையிலேயே முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு அக ழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தங்கம் இருப்பதாக தெரிவித்த இடத்தில் அகழ்வு நடவடிக்கையில் எந்தவித பொருட் களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அகழ்வு பணி கள் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறு த்தப்பட்டுள்ளது
இதேவேளை நேரமின்மை காரணமாக ஆயுதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட பகுதி தோண்டுவதற்கு வேறு ஒருநாள் வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here