மாவீரர் துயிலும் இல்லங்களை புனித இடங்களாகப் போற்றுங்கள்!

0
197

நவம்பர் 27 மாவீரர் நாள். உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நெஞ்சிருத்தி நினைவேந்து கின்ற நாள்.
எனினும் போருக்குப் பின்பு மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு தடைசெய்யப்பட்டது. மாவீரர் நாள் நெருங்குகிறது என்றவுடனேயே பாது  காப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

மாவீரர் நாள் என்றால் அது ஏதோவொரு பயங்கரம் நடைபெறக்கூடிய நாள் போல ஆட்சியாளர்களும் படைத்தரப்பும் காட்டிக் கொள்ளும்.

எனினும் மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுவது தொடர்பில் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.

நினைவுகூருவது மனித உரிமை என்பதை அவர் ஏற்றுக் கொண்டதுபோல நடந்து கொண்டார்.
அதன்காரணமாக மாவீரர் நாளை ஒட்டிய இராணுவக் குவிப்பு, பாதுகாப்புத் தீவிரம் என்பன வலுவாகக் குறைந்தன.

மாவீரர் நாள் அனுஷ்டிப்பதற்கு எதிர்ப்பு இல்லை என்ற அறிகுறியை சூழ்நிலை வெளிப் படுத்தியபோது மாவீரர் நாள் – புனிதமாக – அமைதியாக அனுஷ்டிக்கப்படலாயிற்று.

தமிழர் தாயகம் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
எங்கள் தாயக மண்ணில் மாவீரர் நாளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

உணர்வுபூர்வமாக நடந்த நிகழ்வுக்குள் உறவுகளின் நெக்குரிய நெருடல், கண்ணீரால் சொரிந்தபோது, அன்பும் பாசமும் மேலோங்கி நின்றதைக் காணமுடிந்தது.

ஓ! மாவீரன் என்று நிமிர்ந்து உச்சரித்தாலும் அந்த மாவீரன் ஒரு தாயின் பிள்ளை என்ற போது அங்கு பிரிவுத்துயர் சூழ்ந்து கொள்கிறது.

ஒரு தாயின் கண்ணீர் இன, மத, மொழி பேதம் அறியாதது. அது மனிதத்தை நெக்குருக வைப்பது.

ஆம் 2017ஆம் ஆண்டு நவம்பர் 27 மாவீரர் நாள் இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் ஓர் உண்மையை உணர்த்தி நிற்கிறது.

மாவீரர் தினம் என்று நாம் கூறினாலும் அதற்குள் இருக்கக்கூடிய இழப்பும் பிரிவும் அதனை நினைந்து நினைந்து கண்ணீர் விடுகின்ற தாய்மையும் உறவுப் பாசமும் சாதாரண மானதல்ல. நினைவுகூருவதன் மூலமாக மட்டுமே அந்த இழப்பின் பரிதவிப்பு ஆற்றுப்படுத் தக்கூடியது.

எனவே மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை என்பது மனிதத்தைப் பிசைந்து நோகடிப்பது என்ற உண்மை இப்போது முழுமையாக உணரப்பட்டிருக்கும்.

இந்த உண்மையை உணர்த்துவதில் சிங்களப் பேரினவாதமும் படைத்தரப்பும் விலகி யிருக்க முடியாது என்பதால்,

மாவீரர் நாள் அனுஷ்டிப்புத் தொடர்பில் இன்னும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

அதில் முக்கியமானது மாவீரர் துயிலும் இல்லங்கள் எங்கெல்லாம் இருந்தனவோ அவை அத்தனையும் புனரமைக்கப்பட்டு புனித பகுதியாக வணக்கத்துக்கும் மரியாதைக்கு முரிய இடங்களாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும்.

கூடவே மாவீரர் நாள் புனிதமான தினம் என்ற வகையில் அன்று அகவணக்கம் செலுத்தும் பொருட்டு மரியாதைக்குரிய நாளாகப் பிர கடனம் செய்வதும் கட்டாயமானதாகும்.

இவற்றைச் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் இழப்பில் ஓர் ஆற்றுப்படுத்தலை செயவதில் அனைவரும் பங்காற்றுவதாக இருக்கும்.

(valampuri)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here