ஈரான் – ஈராக் எல்லையில் ஈராக்கில் பூகம்பம்; 221 பேர் பலி!

0
62

ஈரான் – ஈராக் எல்லையில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 221 பேர் உயிரிழந்துள்ளனர்.Photo :AFP/GETTY IMAGES
7.3 ரிச்டர் அளவில் ஈராக்கின் ஹலப்ஜா நகரில் பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தில் இரு நாடுகளிலும் பலர் மரணித்திருப்பதாகவும் சுமார் 2,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  பூகம்பம் ஏற்பட்ட ஹலப்ஜா நகரிலுள்ள சேதமடைந்த கடை ஒன்று…
இந்நிலநடுக்கம் காரணமாக பல நூறு கட்டிடங்கள் சேதம் ஏற்பட்டுள்ளதோடு,  இடிபாடுகளுக்குள்ளும் மக்கள் சிக்கியிருக்கலாம் அச்சம் வெளியிட்டுள்ளன.
இந்நிலநடுக்கம் வளைகுடாவிலுள்ள பல்வேறு நாடுகளிலும், உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2003 இல் ஈரானில் ஏற்பட்ட 6.6 புள்ளி நில அதிர்வில் 26,000 மக்கள் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here