பல்கலை மாணவர் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தம்!

0
468


அநுராதபுரம் சிறைச்சாலை யில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும் யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று ஆரம்பி த்த சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டமானது நேற்று மாலையே நிபந்தனைகளுடன் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மாணவர் ஆலோசகர்களின் வேண்டுகோ ளுக்கு இணங்கவே இப்போராட்டம் அடையாளப் போராட்டமாக மாற்றப்பட்டு தற்காலி கமாக நிறுத்தப்பட்டது. எனினும் நாளை 19 ஆம் திகதி மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதியோடு சந்திப்பில் ஈடுபடும் போது நல்ல முடிவை தராவிட்டால் மறுதினம் 20ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 3 தமிழ் அரசியல்கைதிகள் கடந்த மாதம் 25ஆம் திகதிமுதல் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். அவர்களுடைய கோரிக்கை இது வரையில் நிறைவேற்றப்;படாத நிலையில் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதையும் பொருட்படுத்தாது தொடர்ந்து உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறை வேற்றக்கோரியும் அவர்களின் உடல் நிலையினை சீர் செய்யுமாறு கோரியும் பல போரா ட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் யாழ்.பல் கலைக்கழகத்தின் 5 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,
அவர்களுடைய கோரிக்கை யினை நிறைவேற்றக் கோரியும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம் பித்திருந்தனர்.
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக பிரத்தியேக கொட்டகை அமைத்து நேற்று காலை 8 மணியளவில் அவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். இப்போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் கலைப்பீட மாணவர் ஒன்றியம் என்பனவும் ஆதரவு வழங்கியிரு ந்தன. போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சில நிமி டங்களில் அங்கு வந்த பல்கலைக்கழக மாணவர் ஆலோசகர்கள் ஜனாதிபதியை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் சந்திக்க இருக்கும் நிலையில் குறித்த போராட்டம் தற்போது நட த்துவது பொருத்தமானதாக இருக்காது என் றும், மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டும் போராட்டத்தின் வடிவத்தை மாற் றியமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந் தனர்.
இவ்வாறு போராட்டம் தொடர்ந்து நடந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுடன் மாணவர் ஒன்றியம் மற்றும் மாணவர் ஆலோசகர்கள் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் குறித்த போரா ட்டம் அடையாள போராட்டமாக மாற்றப்பட் டது. இதன்படி நேற்று மாலை 4.10 மணியள வில் போராட்டம் நிபந்தனைகளுடன் முடிவு க்குக் கொண்டுவரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here