பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற சங்கொலி 2017 தேசவிடுதலைப் பாடற்போட்டி!

0
959

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு – தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் ஐரோப்பிய ரீதியில் வருடாந்தம் நடாத்தும்  தேச விடுதலைப் பாடற்போட்டி சங்கொலி 2017 கடந்த (24.09.2017) ஞாயிற்றுக்கிழமை LE BLANC MESNIL பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 16.09.1991 அன்று ஆனையிறவில் இடம்பெற்ற ஆகாய கடல்வெளிச் சமரில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். மௌழி மற்றும் 2009 ஆம் ஆண்டு ஆனந்தபுரம் பகுதி  நேரடிமோதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் எல்லாளன் ஆகியோரின் தாயார் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நடுவர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைபண்பாட்டுக்கழகப்பொறுப்பாளர் திரு.கட்சன் அவர்கள் நடுவர்களை அறிமுகம் செய்துவைத்து, வரவேற்புரை ஆற்றினார்.

வரவேற்புரையைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. பாலர் பிரிவு, கீழ்ப் பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு, அதி அதி மேற்பிரிவு, சிறப்புப் பிரிவு  ஆகிய பிரிவுகளில் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந் நிகழ்வில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. சத்தியதாசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் புலம்பெயர் தேசத்தில் இவ்வாறான நிகழ்வுகளின் அவசியம் பற்றி எடுத்து விளக்கியிருந்தார்.
தொடர்ந்து இந் நிகழ்வை திறம்பட நடாத்த உழைத்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நடுவர்களாக ஆசிரியர் திரு.கே.சேயோன், ஆசிரியர் திரு.எஸ்.கிருபாபரணன், ஆசிரியை திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர். சிறப்பு நிகழ்வாக விடுதலையின் வேர்கள் என்னும் சிறப்பு விருது வழங்கப்பட்டு கலைஞர் திரு. கணேசு தம்பையா, நடன ஆசிரியை திருமதி மோகனரூபி தில்லைரூபன் ஆகியோர் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.
நடுவர்களின் மற்றும் சிறப்பு விருது பெற்றவர்களின் உரைகளைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இம்முறை சங்கொலி 2017 விருதினை செல்வி சோதிராசா சோனா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அவரின் பெற்றோர்களும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, தான் விருது பெற்றுக்கொள்ளக் காரணமாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்த சோனா, இது தனது கலைப்பயணத்திற்கு உந்துசக்தியாக அமையும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழுத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடனும் நிகழ்வுகள் நிறைவுகண்டன.
போட்டி முடிவுகள்
பாலர் பிரிவு
1ஆம் இடம் : டியூரா ஆதிஷா

கீழ்ப்பிரிவு
1ஆம் இடம் : ஜீவராசா பிரசாதினி
2ஆம் இடம் : சுரேஸ்குமார் தமிழினி
3ஆம் இடம் : சார்ளி மிராண்டா கபறினா

மத்தியபிரிவு
1ஆம் இடம் : சுரேஸ்குமார் சாகித்யன்
2ஆம் இடம் : சுரேஸ்குமார் சங்கீதன்
3ஆம் இடம் : ஸ்ரீரங்கன் ஹரினி
செல்வரசா ஏஞ்சலீனா

மேற்பிரிவு
1ஆம் இடம் : ஸ்ரீதரன் ஆரபி
2ஆம் இடம் : தெய்வேந்திரம் ஹரிஹரிணி
3ஆம் இடம் : நிக்ஷன் ரஞ்சித்குமார் தேவஅமிர்தா
உதயகுலசிங்கம் உவானா

அதி மேற்பிரிவு
1ஆம் இடம் : ஜெயதாசன் யாழ்மொழி
2ஆம் இடம் : புஸ்பகரன் அட்ஷியா
3ஆம் இடம் : தேவசுதன் மானசிகா

அதிஅதி மேற்பிரிவு
1ஆம் இடம் : கோகுலதாஸ் சூர்ஜா

சிறப்புப் பிரிவு
1ஆம் இடம் : அருளானந்தம் ஆனந்தராஜன்
2ஆம் இடம் : கந்தையா பகீரதன்

சங்கொலி 2017 விருதுபெறுபவர்
அதிஅதி மேற்பிரிவு
செல்வி சோதிராசா சோனா

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here