மெக்சிகோவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட 2வது பாரிய பூமியதிர்ச்சி 149 பேர் பலி!

0
319

மெக்சிகோவின் தலைநகரில் இருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பூஎப்லா பகுதிக்கு அருகாமையில் நேற்று குறித்த சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நேற்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி 7.1 ரிச்டராக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதுவரை 149 பேர் பலியானதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 1985ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தான் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது நிலநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே இந்த பேரழிவு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட 2வது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here