அனிதா மரணத்திற்கு காரணமான பாஜக அலுவலகம் முற்றுகை!

0
520

மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான பார்ப்பன பாஜக-வின் அலுவலக முற்றுகைப் போராட்டம் சென்னையில் மே பதினேழு இயக்கத்தினால் 03-09-2017 அன்று நடத்தப்பட்டது.

நீட் தேர்வினை நிரந்தரமாக ஒழிக்க வேண்டும். கல்வி உரிமை முழுவதுமாக மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அதுவே அனிதாவின் மரணத்திற்கான நீதியாக இருக்க முடியும் என்று வலியுறுத்தப்பட்டது.

அனிதாவின் மரணம் தற்கொலையல்ல. அது நீட் தேர்வின் மூலம் செய்யப்பட்ட கொலை. இதற்கு பாரதிய ஜனதா கட்சியும், அதற்கு அடியாள் வேலை பார்க்கும் தமிழக அதிமுக அரசுமே காரணம் என்று முழக்கமிட்டனர். 1176 மதிப்பெண்ணும், 196.75 கட் ஆஃப் மதிப்பெண்ணும் எடுத்த தமிழ் குழந்தை அனிதாவிற்கு மருத்துவம் படிக்க தகுதியில்லை என்று இந்திய அரசு சொல்லுமானால், இந்த மருத்துவக் கல்லூரிகள் இருப்பதற்கு பதிலாக இழுத்து மூடுவதே மேல் என்று முழக்கமிட்டனர். பார்ப்பானும், பணக்காரனும் மட்டுமே மருத்துவம் படிப்பதற்கு தமிழ்நாட்டின் 97 சதவீத மக்கள் எதற்காக வரி கட்ட வேண்டும்.

பார்ப்பன CBSEஇல் படித்தவனுக்குத்தான் மருத்துவம் என்று திமிருடன் சொல்லிக் கொண்டிருக்கிறது பார்ப்பன பாஜக அரசு. தமிழ்நாட்டில் மருத்துவத்திற்கு தகுதியான அறிவியல் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 4.8 லட்சம் பேர். ஆனால் CBSEஇல் படித்தவர்கள் வெறும் 4,675 பேர். 1%சதவீத பணக்காரனும், பார்ப்பானும் மட்டும்தான் மருத்துவம் படிக்க வேண்டும் என மனுதர்மத்தை நிறுவிக் கொண்டிருக்கிறது பாஜக அரசு.

கல்வி உரிமை மாநிலத்திற்கே சொந்தம். ஒற்றைக் கல்வி முறையை திணிப்பது என்பது பாசிசம். இவற்றை எதிர்த்து தமிழகம் முழுதும் போராட்டங்களை இளைஞர்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

நரேந்திர மோடி, நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோரின் உருவப்படங்கள் செருப்புகளால் அடித்து கிழித்து எறியப்பட்டன. 200 தோழர்கள் கைது செய்யப்பட்டு தி.நகரில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் சைலேந்தர் உள்ளிட்ட தோழர்களும், டிசம்பர் 3 இயக்கத்தின் தோழர் தீபக் உள்ளிட்ட தோழர்களும், தமிழ் தமிழா இயக்கத்தின் இளங்கோவன் உள்ளிட்ட தோழர்களும், மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

   

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here