திருகோணமலையில் கிணற்றில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு!

0
28

“திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில், கிணற்றில் மூழ்கி சிறுவர்கள் இருவர், உயிரிழந்துள்ளனர் என்று உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். தீர்வைநகரைச் சேர்ந்த எம்.ஹேமதரன் (வயது-16) மற்றும் ஆனந்தபுரியைச் சேர்ந்த கே.புவிராஜ் (வயது-15) ஆகிய இருவருமே, இவ்வாறு கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் இன்று பகல், ஆனந்தபுரியிலுள்ள பொதுக் கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றபோதே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில், உப்புவெளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here