சிறிலங்காவில் 5 விதமான போக்குவரத்து தவறுகளுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம்!

0
222

மோட்டார் வாகன சட்­டத்தின் கீழ் ஐந்­து வ­கை­யான போக்­கு­வ­ரத்து தவ­று­க­ளுக்கு 25 ஆயிரம் ரூபா தண்­டப்­ப­ணத்தை அற­வி­டு  வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அது தவிர மேலும் பல்­வேறு தவ­று­க­ளுக்­கான குறைந்­த­பட்ச தண்­டப்­ப­ணத்தில் திருத்தம் செய்­வ­தற்கும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. விரைவில் இந்த நடை­மு­றைகள் அமு­லுக்கு வரும் என்று கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார்.

மோட்டார் வாகன சட்­டத்தின் கீழ் போக்­கு­வ­ரத்து குற்­றங்­க­ளுக்­காக அற­வி­டப்­ப­டு­கின்ற தண்­டப்­ப­ணத்தை அதி­க­ரிப்­பது தொடர்பில் பரீ­சி­லிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட அதி­கா­ரிகள் குழுவின் மூலம் கீழ்க்­காணும் சிபார்­சு­களை முன்­வைக்­கப்­பட்­டன. அந்த பரிந்­து­ரை­களை செயற்­ப­டுத்­து­வது தொடர்பில் போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வா­வினால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­க­ளுக்கு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
அதன்­படி கீழ்க்­காணும் முக்­கிய ஐந்து போக்­கு­வ­ரத்து தவ­று­க­ளுக்­காக அற­வி­டப்­ப­டு­கின்ற தண்­டப்­ப­ணத்தை 25,000 ரூபா­வாக அதி­க­ரிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
1. அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட போக்­கு­வ­ரத்து அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் இன்றி வாக­னத்தை செலுத்­துதல். 2. போக்­கு­வ­ரத்து அனு­ம­திப்­பத்­திரம் அற்ற சாரதி ஒரு­வரை பணிக்கு அமர்த்­துதல். 3. குடி­போ­தை­யுடன் வாக­னத்தை செலுத்­துதல். 4. புகை­யி­ரத வீதி­யினுள் முறை­யற்ற விதத்தில் மோட்டார் வண்­டி­களை செலுத்­துதல். 5. அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட காப்­பு­றுதி இன்றி வாகனம் செலுத்­துதல் ஆகிய ஐந்து போக்­கு­வ­ரத்து தவ­று­க­ளுக்­காக 25000 ரூபா தண்­டப்­பணம் அற­வி­டப்­படும்.
மேலும் பல்­வேறு வகை­யான போக்­கு­வ­ரத்து தவ­று­க­ளுக்­காக தற்­போது அற­வி­டப்­ப­டு­கின்ற குறைந்த பட்ச தண்­டப்­ப­ணத்தில் திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது.
அதிக வேகத்தில் வாக­னத்தை செலுத்­துதல்.
குறிக்­கப்­பட்ட வேகத்தை விட 20 வீதம்­வரை அதிக வேகத்தில் வாகனம் செலுத்­து­ப­வர்­க­ளுக்கு 3,000 ரூபா தண்­டப்­பணம் அற­வி­டப்­படும், குறிக்­கப்­பட்ட வேகத்தை விட 20 வீதத்­துக்கும் அதி­க­மான மற்றும் 30வீதத்­துக்கும் குறை­வான வேகத்தில் வாகனம் செலுத்­து­ப­வர்­க­ளுக்கு 5,000 ரூபா தண்­டப்­பணம் அற­வி­டப்­படும்.
குறிக்­கப்­பட்ட வேகத்தை விட 30 வீதத்­துக்கும் அதி­க­மான மற்றும் 50 வீதத்­துக்கும் குறை­வான வேகத்தில் வாகனம் செலுத்­து­ப­வர்­க­ளுக்கு 10,000 ரூபா தண்­டப்­பணம் அற­வி­டப்­படும். குறிக்­கப்­பட்ட வேகத்தை விட 50 வீதத்­துக்கும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்­து­ப­வர்­க­ளுக்கு 10,000 ரூபா தண்­டப்­பணம் அற­வி­டப்­படும்.
இடது பக்­கத்தால் முன்­னோக்கி செல்­லுதல்
இக்­குற்­றத்­துக்­காக உரிய இடத்­தி­லேயே அற­வி­டப்­படும் வகையில் தண்­டப்­ப­ணத்­தினை 2,000 ரூபா வரை அதி­க­ரிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.  பிறி­தொரு நபரை நோக்கி கவ­ன­யீ­ன­மாக அல்­லது எவ்­வித கார­ண­மு­மின்றி வாகனம் செலுத்தும் குற்­றத்­துக்­காக 10,000 ரூபா குறைந்­த­பட்ச தண்­டப்­ப­ணத்தை விதிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
பாது­காப்­பற்ற முறையில் அல்­லது விபத்­தொன்றை ஏற்­ப­டுத்தும் வகையில் மோட்டார் வாக­னங்­களை செலுத்தும் குற்­றத்­துக்­காக 10,000 ரூபா குறைந்­த­பட்ச தண்­டப்­ப­ணத்தை விதிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
குறித்த வய­துக்கு குறைந்த வய­து­டைய ஒரு­வ­ரினால் வாகனம் செலுத்­தப்­படும் குற்­றத்­துக்­காக தற்­போது காணப்­ப­டு­கின்ற குறைந்த பட்ச தண்­டப்­ப­ணத்­தினை 5,000 ரூபா­வி­லி­ருந்து 30,000 ரூபா வரை அதி­க­ரிப்­ப­தற்கு பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை மோட்டார் வாகன சட்­டத்தில் குறிப்­பி­டப்­ப­டாத குற்­றங்­க­ளுக்­காக அற­வி­டப்­ப­டு­கின்ற தண்­டப்­ப­ணத்தை 2,500 ரூபா வரை அதி­க­ரிப்­ப­தற்கும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. .
கைய­டக்கத் தொலைப்­பே­சி­யினை பயன்­ப­டுத்திக் கொண்டு வாக­னங்­களை செலுத்­து­வது தொடர்பில் 2,000 ரூபா தண்­டப்­பணம் குறித்த இடத்­தி­லேயே அற­வி­டப்­படும். மேலும் சாரதி புள்­ளி­யிடும் செயன்­மு­றை­யினை துரி­தப்­ப­டுத்­தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
வாகன விபத்­துக்கள் அதிகம் இடம்­பெறும் இடங்­களில் பொருத்­தப்­பட்­டுள்ள சி.சி.ரி.வி. கெம­ராக்­களின் உத­வி­யுடன் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
போக்­கு­வ­ரத்து குற்­றங்­க­ளுக்­காக அற­வி­டப்­ப­டு­கின்ற உரிய இடத்­தி­லான தண்­டப்­ப­ணத்தை அற­வி­டு­வ­தற்­காக இலத்­தி­ர­னியல் செலுத்­துகை முறை­யினை பயன்­ப­டுத்­து­வது குறித்து ஆரா­யப்­படும். அதி­வேக வீதி­களில் மற்றும் பெருந்­தெ­ருக்­களில் பய­ணிக்க வேண்­டிய உய­ரிய வேகம் தொடர்பில் தெளி­வாக பிர­சு­ரிக்­கப்­படும்.
இலங்கை போக்­கு­வ­ரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து போக்­கு­வ­ரத்­துக்­கு­ரிய ஒன்­றி­ணைந்த நேர­சூ­சி­யினை அல்­லது பொருத்­த­மான வேலைத்­திட்­ட­மொன்றை துரித கதியில் செயற்­ப­டுத்­தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் தொடர்பான நிர்ணயங்களை மேற்கொள்வதற்கு நிர்வனம் ஒன்றை ஸ்தாபிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து சட்டத்தினை செயற்படுத்துகின்ற சில அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் சட்டத்தினை செயற்படுத்துவதனை உறுதி செய்வதற்காகவும் நவீன தொழில்நுட்ப முறையொன்றை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here