80 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி கத்தார் சென்று வரலாம்!

0
37

இந்தியா உள்ளிட்ட 80 நாட்டினருக்கு விசா இன்றி தமது நாட்டிற்கு வர கத்தார் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை உள்வாங்கப்படவில்லை.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் கத்தார் வெளியிட்டுள்ள 80 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் கத்தார் நாட்டிற்கு செல்ல விரும்பினால் விசா விண்ணப்பிக்கவோ, பணம் செலுத்தவோ தேவையில்லை என கத்தார் அறிவித்துள்ளது.
அதேபோல், எத்தனை முறை வேண்டுமானாலும் கத்தாருக்கு வந்து செல்வதற்கான சலுகையையும் அந்நாடு வழங்கியுள்ளது.
வருகை தரும் பயணிகளின் நாட்டைப் பொறுத்து, அவர்களது பயண காலவரையறை 30 நாட்கள் முதல்180 நாட்கள் வரை வேறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் நாட்டிற்கு அண்டைநாடுகளுடனான உறவில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அரபு நாடுகளும் கத்தாருடனான உறவைத் துண்டித்துள்ளன.
இந்நிலையில், நாட்டின் வான்வழி போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு, விசா நடைமுறையை குறிப்பிட்ட நாடுகளுக்கு கத்தார் தளர்த்தியுள்ளது.
2.4 மில்லியன் மக்கட்தொகை கொண்ட கத்தார் நாட்டில், 90 சதவீத மக்கள் வெளிநாட்டவர்கள் ஆவர்.
அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் பெரும்பாலும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 33 நாடுகள் கத்தார் சென்று விசாவினை அங்கே பெற்றுக்கொள்ள முடியும் என கத்தார் அறிவித்துள்ளது. இந்நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான விசா 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதுடன், இந்த விசாவுடன் ஒரு முறையோ அல்லது பல தடவைகளோ கத்தாருக்கு சென்று அங்கு 90 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும்.
அந்நாடுகளாவன…
1. ஆஸ்திரியா
2. பஹமாஸ்
3. பெல்ஜியம்
4. பல்கேரியா
5. குரோஷியா
6. சைப்ரஸ்
7. செக் குடியரசு
8. டென்மார்க்
9. எஸ்டோனியா
10. பின்லாந்து
11. பிரான்ஸ்
12. ஜெர்மனி
13. கிரேக்கம்
14. ஹங்கேரி
15. ஐஸ்லாந்து
16. இத்தாலி
17. லட்வியா
18. லீக்டன்ஸ்டைன்
19. லித்துவேனியா
20. லக்‌ஷம்பர்க்
21. மால்டா
22. நெதர்லாந்து
23. நோர்வே
24. போலந்து
25. போர்ச்சுக்கல்
26. ரோமேனியா
27. சேச்செல்ஸ்
28. ஸ்லோவாக்கியா
29. ஸ்லோவேனியா
30. ஸ்பெயின்
31. ஸ்வீடன்
32. ஸ்விட்சர்லாந்து
33. துருக்கி
இதேவேளை, 47 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கத்தார் சென்ற பின்னர் விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்களின் விசா 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனவும் அவர்கள் கத்தாரில் 30 நாட்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாடுகளாவன…
1. அன்டோரா
2. அர்ஜென்டினா
3. அவுஸ்திரேலியா
4. பெலாரஸ்
5. பொலிவியா
6. பிரேசில்
7. புரூனே
8. கனடா
9. சிலி
10. சீனா
11. கொலம்பியா
12. ஈக்வடோர்
13. பனாமா
14. கொஸ்டா ரிக்கா
15. ஜோர்ஜியா
16. கயானா
17. ஹொங்கொங்
18. இந்தியா
19. இந்தோனேசியா
20. அயர்லாந்து
21. ஜப்பான்
22. கசகஸ்தான்
23. லெபனான்
24. அசர்பெய்ஜான்
25. மெசிடோனியா
26. மலேசியா
27. மாலைத்தீவுகள்
28. மெக்சிகோ
29. மோல்டாவா
30. மொனாகா
31. நியூசிலாந்து
32. பராகுவே
33. பெரு
34. ரஷ்யா
35. சென் மரினோ
36. சிங்கப்பூர்
37. தென்னாபிரிக்கா
38. தென் கொரியா
39. சூரினாம்
40. கியூபா
41. தாய்லாந்து
42. உக்ரைன்
43. ஐக்கிய இராச்சியம்
44. ஐக்கிய அமெரிக்கா
45. உருகுவே
46. வத்திக்கான் நகரம்
47. வெனிசுலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here