ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கொடூரத் தாக்குதல் : 50 பேர் பலி!

0
118

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிரமாத்தில் ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள சரி புல் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மாகாணத்தின் ஆளுநரான சபிநுல்லா அமானி இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்து இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மிர்ஸா ஒலங் பகுதியை ஒட்டிய சயாத் மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு சோதனை சாவடியில் கிளர்ச்சியாளர்கள் கொடூர தாக்குதல் நடத்தியதோடு 30-க்கும் அதிகமான வீடுகளுக்கு தீவைத்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், அதிகபட்சம் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலில் மிகவும் கொடூரமான முறையில் மனிதாபமற்ற நிலையில் கொல்லப்பட்டனர். இத்துடன் ஆப்கன் பாதுகாப்பு படையை சேர்ந்த ஏழு பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் தலிபான் மற்றும் ஐ.எஸ். இயக்கத்தினர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டதாக அமானி தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என தலிபான்கள் மறுத்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு படைகள் மற்றும் ஆப்கன் விமான படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் சம்பவங்கள் கடந்த சில காலங்களில் அதிகரித்துள்ளது. தினசரி அடிப்படையில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 1662 பேர் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளனர், 3581 பேர் காமுற்றுள்ளனர், என ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here