இந்தியா புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று சிறப்பு மிக்க தீர்மானம்!

0
26

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று இந்தியாவிற்கு கோரிக்கை வைத்து “ஓவிய வேங்கை” தூரிகைப் போராளி அய்யா வீரசந்தானம் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வின் சார்பாக வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை இயக்குனர் வ.கௌதமன் முன்மொழிந்த பொழுது மேடையிலிருந்த தமிழீழ உணர்வு கொண்ட மாபெரும் தலைவர்களும் , தமிழீழத்தின் மீது பற்றுக்கொண்ட தமிழர்கள் அனைவரும் எழுந்து நின்று மிக உக்கிரமாக ஒரு நிமிடம் “கைஒலி” எழுப்பி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கவிஞர் காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ம.நடராசன், தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், தியாகு , தந்தை பெரியார் திராவிடர் இயக்கத் தலைவர் கோவை கு. ராமகிருஷ்ணன் , பேராசிரியர் மு. நாகநாதன்,தயாரிப்பாளர் மணிவண்ணன் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ,கி.த.பச்சையப்பன் ஓவியர் மருது , பாவலர் அறிவுமதி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY