ஆவா குழுவின் மது உள்­ளிட்ட இரு­வ­ருக்கும் விளக்­கம­றியல் ; மேலும் இருவர் கைது!

0
555

யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாடு ஒன்று தொடர்பில் விசா­ரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்­குதல் நடத்­திய குழுவின் முக்­கிய உறுப்­பி­னர்கள் இரு­வ­ரையும் எதிர்­வரும் 10 ஆம் திக­தி­வ­ரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்க யாழ். நீதிவான் நீதி­மன்றம் நேற்று உத்­தர்­விட்­டது.

ஆவா குழுவின் மது என அறி­யப்­படும் பிர­பல உறுப்­பினர் உள்­ளிட்ட இரு­வரே நேற்று முன் தினம் கைதான நிலையில் இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கோப்பாய், யாழ். தலை­மை­யக பொலிஸார் முன்­னெ­டுத்த இரு வேறு நட­வ­டிக்­கை­களின் போது இவ்­வி­ரு­வரும் கைது செய்­யப்­பட்­டனர். அவர்­க­ளிடம் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டதன் பின்னர் யாழ். நீதிவான் சதீஸ்­கரன் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­டுள்­ளனர். இதன் போதே நல்லூர் சத்­தி­யா­னந்­தன வீதியைச் சேர்ந்த 20 வய­து­டைய மதூ எனப்­படும் சிவ­ராஷா மதுஷன் மற்றும் 23 வய­து­டைய மானிப்பாய் பகு­தியைச் சேர்ந்த விஜ­ய­ரத்னம் சிவராஜ் ஆகிய சந்­தேக நபர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

மதுவை யாழ். தலைமை பொலிஸ் நிலை­யத்தின் சிறப்புக் கூழுவும் விஜ­ய­ரத்னம் சிவ­ராஜை கோப்பாய் பொலி­ஸாரும் கைது செய்­தி­ருந்­தனர்.

முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் யாழில் பொலிஸார் மீதான வாள்­வெட்டு தொடர்பில் அதிர்ச்சித் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார். கைதான இரு சந்­தேக நபர்­க­ளி­டமும் பிரத்­தி­யேக குழுக்கள் தனித்­த­னி­யாக விசா­ர­ணை­களை நடாத்­து­வ­தா­கவும் அவர்­க­ளி­ட­மி­ருந்து முக்­கிய பல தக­வல்கள் பெறப்­பட்­டுள்ள நிலையில் அதனை மையப்­ப­டுத்தி அடுத்த கட்ட விசா­ர­ணை­களை நகர்த்­தி­யுள்­ள­தா­கவும் அந்த அதி­காரி தெரி­வித்தார்.

ஏனைய சந்­தேக நபர்­களை கைது செய்ய சிறப்பு திட்டம் வகுக்­கப்­பட்டு 6 குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார். .

அதன்­படி இந்த வாள் வெட்டுத் தாக்­கு­த­லா­னது ஆவா எனும் குழுவின் உறுப்­பி­னர்­களை கொண்ட ஆயுதக் குழு­வொன்றின் தாக்­குதல் என்­பதை இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் பொலிஸார் உறுதி செய்­து­கொண்­டுள்­ளனர். ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்­ற­தாக கூறப்­படும் தனு ரொக் எனும் மற்­றொரு வாள் வெட்டுக் குழு தொடர்பில் இதன் போது தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆவாவில் இருந்து விலகிச் சென்று தனு ரொக் குழு எனும் குழுவை உரு­வாக்­கி­யுள்ள தனு எனும் நபரை மானிப்பாய் பகு­தியில் வைத்து ஆவா குழுவின் உறுப்­பி­னர்கள் குழு­வினர் தாக்­கி­யுள்­ளனர்.

தனு ரொக் குழுவைச் சேர்ந்த தனுவை கடந்த ஞாயி­றன்று ( ஜூலை 30 ஆம் திகதி) மோட்டார் சைக்கிள் வாள்­வெட்டுக் கும்பல் சென்று தேடி­யுள்­ளது. இதன் பின்பு அந்தக் கும்பல் அங்­கி­ருந்து சென்­றுள்­ளது. பிற்­பகல் ஆவா வாள்­வெட்டுக் கும்பல் மீண்டும் மானிப்­பாய்க்கு வந்­துள்­ளது.

தனு ரொக் தனது வீட்­டி­லி­ருந்து சிறிது தொலைவில் உள்ள ஆல­யத்தில் இன்­னொரு இளை­ஞ­னுடன் கதைத்துக் கொண்டு நின்­றுள்ளார். இதன்­போது மோட்டார் சைக்­கிள்­களில் சென்ற வாள்­வெட்டுக் கும்பல் தனுவைக் விரட்டி விரட்டி வெட்­டி­யுள்­ளது.

இந்த வாள் வெட்டு சம்­ப­வத்தின் பின்னர் ஆவ குழு­வினர் கோப்பாய் நோக்கி மோட்டார் சைக்­கிள்­களில் சென்­றுள்­ளனர். இதன் போதே வெறு முறைப்­பாட்டை விசா­ரணைச் செய்ய சென்ற பொலிஸார் இரு­வரும் மோட்டார் சைக்­கிளில் சென்­றுள்­ளனர். தம்­மிக, சுரேன் ஆகிய அந்த பொலிஸார் இரு­வரும் . தம்மிக, சுரேன் ஆகிய அந்த பொலிஸார் இருவரும் மானிப்பாய் வாள் வெட்டு தொடர்பில் தம்மை கைது செய்ய வருவதாக எண்ணியே ஆவா குழு உறுப்பினர்கள் அவர்கள் இருவரையும் விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணை ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை,யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் மேலும் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here