ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் இரட்டைக் குண்டு வெடிப்பு : 30 க்கும் மேற்பட்டோர் பலி!

0
37

மத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையில் ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரத்திலுள்ள ஜாவாடியா பள்ளிவாசலில் ஏற்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பெருந்தொகையானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குண்டுவெடிப்புச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்கொலைக் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிதாரி ஒருவரால் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
அப் பிரதேச அரச அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நேற்று இரவு  உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக இருந்ததாகவும் இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் காயமடைந்தோர் 64 இற்கும் மேற்படலாம் எனவும் தெரிவித்தார்.
இத் தாக்குதலை மேற்கொண்ட இருவரும் உயிரிழந்துள்ளதாகவும்  இது வரை குண்டு வெடிப்பு சம்பவத்தை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் அந் நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here