எந்தக் குற்றச் செயல் நடந்தாலும் முன்னாள் போராளிகளை சாட்டுவது…!

0
38

நாட்டில் எந்த மூலையில் என்ன குழப்பம் நடந்தாலும் அந்தச் சம்பவத்துடன் முன்னாள் போராளிகளைத் தொடுக்கின்ற கொடுமைத் தனம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதனால் முன்னாள் போராளிகளின் நாளாந்த வாழ்வு என்பது ஏக்கம் நிறைந்ததாகவும் பயம் கொண்டதாகவும் அமைந்திருப்பதை நாம் ஏற்றுத்தானாக வேண்டும்.
2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் யுத்தம் நின்று போனாலும் முன்னாள் போராளிகளுக் கான புனர்வாழ்வும் அவர்களைச் சிறையில் அடைத்து வதைப்பதுமான நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

புனர்வாழ்வு வழங்கப்பட்ட பின்னரும் அவர்களை கைது செய்வது, இராணுவ முகாமுக்கு அழைப்பது, புலனாய்வுப் பிரிவினர் விசாரிப் பது என்ற தொந்தரவுகளுக்கு அவர்கள் முகம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

இப்போது யாழ்ப்பாணத்தில் இரண்டு முக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலொன்று நல்லூரில் நீதிபதி இளஞ்செழியன் மீது நடந்த துப்பாக்கிப் பிரயோகம்  மற்றையது கொக்குவிலில் இரண்டு பொலிஸார் மீது நடந்த வாள்வெட்டுச் சம்பவம்.
இச்சம்பவங்கள் தொடர்பில் இந்த நாட்டின் அனைத்து தரப்புக்களும் கவனம் செலுத்தியுள்ளன.
அதிலும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ச­ ஆகியோர் இச்சம்பவங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை அவசரமாகப் பதிவு செய்துள்ளனர்.
தவிர இச்சம்பவங்களை அடுத்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்துள்ளார்.

அந்த ஆய்வுகளின் பின்னர் அவர் விடுத்த அறிவிப்பில் நடந்து முடிந்த சம்பவங்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பு உண்டு என்பதாகக் கூறியுள்ளார்.
ஆக, மீண்டும் முன்னாள் போராளிகள் மீது விசாரணைகளும் விளக்கங்களும் நடப்பதற்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படுவது தெரிகின்றது.
தாமும் தம் பாடும் என்றிருக்கின்ற முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் இடுக்கண் கொடுப்பதற்கான சதிவேலைகள் நடப்பது தெரிகின்றது.

உண்மையில் முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பங்களும் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் சீவனோபாயம் என்பது இடர்பாட்டில் உள்ளது.
முன்னாள் போராளிகள் என்பதற்காக அவர் களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவ தில் கூட புறக்கணிப்புக்கள் இருப்பதான தகவல் களை பொது அமைப்புக்கள் பதிவு செய்துள்ளன.

இந்த வேலைவாய்ப்பு புறக்கணிப்பு என்பது தனியார் மற்றும் அரச துறைகள் இரண்டிலும் நடப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர முன்னாள் போராளிகள் சமூகத் துடன் இசைந்து வாழ்வதில் கூட பலத்த கஷ் டங்களை சந்தித்துள்ளனர். இந்நிலைமை தமிழ் மக்கள் சமூகத்திலேயே இருக்கும் போது முன்னாள் போராளிகள் என்பவர்கள் உடல், உள, சமூக ரீதியில் சதா தண்டிக்கப்படுகின்ற னர் என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

நிலைமை இதுவாக இருக்கையில், யாழ்ப் பாணத்தில் நடந்த பொலிஸார் மீதான வாள் வெட்டுச் சம்பவத்துக்கும் முன்னாள் போராளி களுக்கும் தொடர்புண்டு என பொலிஸ்மா அதிபர் கூறியிருப்பது முன்னாள் போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அதிர்ச் சிக்குட்படுத்தியுள்ளது.

எனவே எதற்கெடுத்தாலும் முன்னாள் போரா ளிகளை குற்றம் சாட்டுவதை விடுத்து உண்மையை கண்டறிவது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் குற்றச்செயல்களை தடுப்ப தற்கும் உதவுவதாக இருக்கும்.

(valampuri)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here