வட மாகாண சபை உறுப்­பி­னர்கள் மூவ­ரிடம் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு விசா­ரணை!

0
105

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான எம்.கே.சிவா­ஜி­லிங்கம், சு. பசு­ப­திப்­பிள்ளை மற்றும் ம.தியாக­ராஜா ஆகி­யோ­ரிடம் குற்றப் புல­னாய்வு பிரிவு நேற்று மூன்று மணித்­தி­யா­லங்கள் விசா­ரணை நடத்­தி­யுள்­ளது.
இனப்­ப­டு­கொலை என்ற வார்த்தைப் பிர­யோகம் மற்றும் ஜனா­தி­பதி முல்­லைத்­தீ­விற்கு விஜயம்  மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்­தமை தொடர்பில் கருத்து வெளி­யிட்­டமை போன்ற விட­யங்­க­ளுக்­கா­கவே இந்த விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
காலை ஒன்­பது மணி முதல் மாலை நான்­கு­ம­ணி­வரை இந்த விசா­ரணை யாழ்ப்­பாண பொலிஸ்­நி­லை­யத்தில் நடத்­தப்­பட்­டது.
குறித்த விசா­ர­ணைகள் தொடர்­பாக வட­மா­கா­ண­சபை உறப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் கருத்துத் தெரி­விக்­கையில்,
இன்று (நேற்று) காலை 09 மணிக்கு கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளப்­பொ­லிஸார் யாழ்ப்­பாண பொலிஸ் நிலை­யத்­திற்கு வருகை தரு­மாறு அழைப்பு விடுத்­தி­ருந்­தனர். அதற்­க­மை­வாக நானும் ஏனைய இரண்டு மாகாண சபை உறுப்­பி­னர்­களும் சென்­றி­ருந்தோம். குறிப்­பாக என்­னி­டமே பிர­தான விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. கடந்த மே மாதம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சந்­திப்­பின்­போது கூறிய விட­யங்கள் தொடர்­பாக வீடியோ மற்றும் ஓடியோ பதி­வு­களைப் பெற்­றுள்­ள­துடன் வாக்­கு­மூ­லமும் பெற்­றுள்­ள­தா­கவும் தெரி­வித்­தார்கள். தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்­றது இனப்­ப­டு­கொலை தான் என்­பது தொடர்­பா­கவே என்­னிடம் விசா­ரணை மேற்­கொண்­டார்கள்.
ஐ.நா. செய­லாளர் நாயகம் உள்­ளிட்ட வேறு அமைப்­புக்கள் 40 ஆயிரம் மற்றும் 70 ஆயிரம் பேர் பலி­யா­ன­தாக கூறி­யுள்­ளார்கள். மேலும் வடக்­கு­மா­கா­ண­ச­பையில் இனப்­ப­டு­கொ­லைதான் இடம்­பெற்­றுள்­ளது என்­பது தொடர்பில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு ஐ.நா.சபைக்கு அனுப்­பி­யுள்ளோம். ஆகவே என்னைப் பொறுத்­த­வ­ரையில் இனப்­ப­டு­கொ­லைதான் நடந்­தது என்­பதை கூற­மு­டியும். இதற்­கா­கவே இனப்­ப­டு­கொலை வாரம் அல்­லது மாதம் அனுஷ்­டிக்க முடியும். அதேயே செய்தேன். என்று கூறினேன். மற்றும் முல்­லைத்­தீ­விற்கு வருகை தரும் ஜனா­தி­ப­திக்கு கறுப்­புக்­கொடி காட்­டு­வது தொடர்­பிலும் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். இதற்கு நான் ஜனா­தி­ப­தியின் விஜ­ய­மா­னது எங்­க­ளது துக்­க­தி­ன­மா­கவே இருந்­தது. அத­னா­லேயே அதனைக் கூறினேன். அது எனது ஜனநாயக உரிமை எனவும் கூறினேன். குறித்த விசாரணைகளின் அறிக்கையை சட்டமா அதிபரிடம் தாம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து வழக்குத் தொடர்வது அல்லது மேலதிக விசாரணைகள் தொடர்பில் அவரே தீர்மானிப்பார் எனவும் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here