பிரான்சில் இடம்பெற்ற யூலைமாதம் வீரகாவியமான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு!

0
48

கட்டு நாயக்கா விண்ணுந்து நிலையத் தாக்குதலில் வீரகாவியமான கரும்புலி மறவர்கள் மற்றும் யூலைமாதம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் நேற்று (30.07.2017) ஞாயிற்றுக்கிழமை லாக்குர்நோவ் பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 01.05.2008 அன்று முகமாலைச் சமரில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப். இசைப்பிரியனின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.


(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

NO COMMENTS

LEAVE A REPLY