இலங்கையர்களுடன் சென்ற கப்பல் வடக்கு சைப்ரஸ் அதிகாரிகளிடம் சிக்கியது!

0
409

வடக்கு சைப்ரஸ் ஊடாக இலங்கையர்களை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த கப்பல் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், குறித்த கப்பலில் பயணித்த இலங்கையர்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கப்பலில் 20 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களா அல்லது பயிற்சிகளில் ஈடுபடும் கடற்படையினரா என்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

ஜிபுட்டியிலிருந்து லிபியா நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த ‘சீ ஸ்டார்” என்ற கப்பலே சைப்ரஸில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கப்பல் சைப்ரஸை நோக்கி பயணித்தமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையர்கள் ஜிபுட்டியிலிருந்து கப்பலில் ஏறியுள்ளதாகவும் அங்கிருந்து கடல் மார்க்கமாக எகிப்துக்கு பயணித்து, பின்னர் அங்கிருந்து விமானம் ஊடாக இலங்கை வர திட்டமிட்டுள்ளனர்.

எனினும், குறித்த கப்பலில் பயணித்த 20 இலங்கையர்களில், ஐந்து பேர் தங்களுக்கு சைப்ரஸில் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம் கடற்படையினர் இல்லை எனவும், இத்தாலிக்கு செல்வதற்கு 16 ஆயிரம் யூரோக்களை வழங்கியதாகவும் அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY