பிரான்சு பாராளுமன்றப் பகுதியில் இடம்பெற்ற கறுப்பு யூலை கவனயீர்ப்பு நிகழ்வு!

0
348

சிறிலங்காவில் சிங்களக் காட்டுமிராண்டிகளால் 1983 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை 23 தமிழினப் படுகொலையின் 34 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சின் பாராளுமன்றம் அமைந்துள்ள Invalides பகுதியில் இன்று (24.07.2017) திங்கட்கிழமை பிற்பகல் 15.30 மணியளவில் இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழீழ மக்கள் பேரவை, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழீழத் தேசியக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறு கறுப்பு உடையணிந்து மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழி அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் வெளிநாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் ஆற்றியிருந்தார். கறுப்பு யூலை தமிழினப் படுகொலை தொடர்பில் கருத்துரைத்த அவர், இப்பகுதியில் குறித்த கவனயீர்ப்பு நிகழ்வை வைப்பதன் மூலம் பிரான்சின் புதிய அரசுக்கு எமது போராட்டத்தை தெரிவிக்க ஏதுவாக அமையும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் கவனயீர்ப்பு அமைதியாக நிறைவடைந்தது.


(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here