கேப்பாபுலவு மக்களின் மண்மீட்பு போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு!

0
220

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையாக்கப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 27நாடகளாக வீதியில் தொடர் கவனயீர்ப்பு போராட் டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் 27ஆவது நாளான இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கேப்பாபுலவு மக்களின் போராட்டக்களத்துக்கு வருகைதந்து தமது ஆதரவினை வெளியிட்டிருந்ததோடு மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவி பொருட்களையும் வழங்கி வைத்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் மற்றும் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ உள்ளிட்ட அனுராதபுரம்,கொழும்பு,யாழ்ப்பாணம்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய பிரிகேசன்களை சேர்ந்த சிங்கள தமிழ் முஸ்லீம் ஆசிரியர்கள் இன்று கேப்பாபுலவுக்கு வருகைதந்திருந்தனர்.
அத்தோடு இன்று கேப்பாபுலவு போராட்டக்களத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளையும் விசேட உளவள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கத்தில் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் கேப்பாபுலவு மக்களின் நியாயமான தமது சொந்த நிலங்களில் வாழ வேண்டும் என்ற கோரிக்கை தீர்த்து வைக்கப்படவேண்டியது.
இதுவரை நாள் இந்த மக்கள் வீதியில் கிடந்தது படும் அவலத்தை கண்டு கொள்ளாத நல்லாட்ச்சி என் சொல்லும் அரசு இவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இவர்கள் தமது சொந்த நிலங்களில் வாழ வளி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here