தாயக மக்களின் அவலநிலை ஐரோப்பிய ஒன்றியத்தின் செவிகளிலும் ஒலித்தது!

0
552

கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டார பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இவ்விடயத்தை சர்வதேச நாடுகளின் மற்றும் மனிதவுரிமை அமைப்புகளின் கவனத்துக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை எடுத்துச்சென்றுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளுக்கு மின்னஞ்சல் ஊடாக இது தொடர்பான அறிக்கைகள் அனுப்பப்பட்டத்தோடு இன்றைய நாட்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற் கொள்ளப்படும் பல்வேறு உயர்மட்ட சந்திப்புகளிலும் தாயக மற்றும் புலம்பெயர் அரசியற் செயற்பாட்டாளர்களால் தாயகத்தில் இன்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் கடமைப்புசார் இன அழிப்பு தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here