இலங்கை அரசு வாக்குறுதிகளை மீறக்கூடாது; சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

0
479
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில், சர்வதேச விசாரணையாளர்களை உள்ளடக்குவது குறித்து இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கக்கூடாதென சர்வதேச மனித உரிமைகள் கண்காணி ப்பகம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்கள் உள்ளீர்க்கப்படுவர் என இலங்கை அரசாங்கம் உறுதி மொழி வழங்கியிருந்த போதும், ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது அவற்றிலிருந்து பின்வாங்கியுள்ளனர் என மனித உரி மைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அடுத்தே உலகளவில் இலங்கை நன்மதிப்பை பெற்றதென குறி ப்பிட்டுள்ளதோடு, நீதியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களும் சர்வதேசத்தின் தலையீட்டை எதிர்பார்த்துள்ள நிலையில் நீதி விசாரணை பொறிமுறையில் தாமதத்தை ஏற்படுத்துவது உகந்ததல்ல எனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணி ப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here