கவிஞர் இன்குலாப் ஐயாவிற்கு இறுதி வணக்கங்கள்…தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு!

0
542

  tcc logo copy                                                                                                        01.12.2016
கவிஞர் இன்குலாப் ஐயாவிற்கு இறுதி வணக்கங்கள்…
தமிழின   உணர்வாளரும்,   மக்கள்   பாவலருமாகிய   ‘   பாவலர்   இன்குலாப்   ஐயா   அவர்கள்   தனது
இயற்கையின் நியதியில் சாவடைந்த செய்தியானது பிரான்சு வாழ் தமிழீழ மக்களின் மனதில் ஆறாத துயரினை
தந்துள்ளது.
‘   சில   வரலாற்றைப்   படிக்கவும்,   தெரிந்து   கொள்ளவும்   மறந்தால்   நம்   தொன்மையை   இழப்போம்.   இந்த
வரலாற்றை படிக்க மறந்தால் ஒரு வேளை நம் இனத்தையே இழப்போம் “.
என்பதற்கமைய   பல்நெடுகாலம்   சீரோடும்,   சிறப்போடும்,   வீரத்தோடும்   வாழ்ந்த   தமிழினம்   இன்று
அடிமைப்பட்டு, அல்லல் பட்டுக் கொண்டு கிடக்கின்றது மீண்டும் அது தலைநிமிர்த்த வேண்டும் அதனை தமிழீழ
விடுதலைப்போராட்டத்தினால்   தான்   நிறைவேற்றி   வைக்க   முடியும்   என்பதை   தமிழீழ   விடுதலைக்கான
ஆயுதப்போர்   முளைவிட்ட   காலம்   முதல்   இன்று   வரை   தனது   துரிகையினாலும்,   புரட்சிகர   கவிதைகளாலும்,
பாடல்வரிகளாலும், பேச்சுக்களாலும் வலுவூட்டியவர் எங்கள் பாவலர் இன்குலாப் ஐயா அவர்களாகும்.
எங்கள்   தமிழீழ   தேசியத்   தலைவர்   அவர்களின்   அன்புக்கும்,   மதிப்புக்குமுரியவராகி   போராட்டத்தின்
ஆரம்ப   காலங்களில்   தமிழ்நாட்டின்   பயிற்சி   முகாம்களில்   கவிகளாலும்,   கலைகளாலும்   எம்   போராளிகளுக்கு
பக்கபலமாய் இருந்து உறுதி சேர்த்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும், அதன் அவசியத்தையும் புரிந்து
கொள்ளாதவர்கள் மத்தியில் அன்று முதல் இன்று வரை பட்டிதொட்டிகள் எல்லாம் சென்று எம் போராட்டத்திற்கு
வலுச்சேர்த்தவர். இவர் எழுதிய பாடல் வரிகள், கவிதைகள் பல மாவீரர்கள் நெஞ்சிலும் போராளிகள் மனதிலும்
இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.
தன்   இனத்தில்,   மொழியில்   உணர்வும்,   பற்றும்   கொண்டதொரு   கலைஞன்,   தனது   மண்ணுக்கும்,
இனத்திற்கும், மொழிக்கும், தன் வாழ்நாளில் எதைச்செய்ய வேண்டுமோ அதைச் சரிவரச் செய்து தமிழ்நாட்டு
மக்கள்   மனதில்   மட்டுமல்ல,   தமிழீழ   மக்கள்   மனதிலும்   என்றும்   மறையாததோர்   இடத்தை   தக்க
வைத்துக்கொண்டுள்ளார் பாவலர் இன்குலாப் ஐயா அவர்கள்.
ஒர்   சிறந்த   தமிழின,   விடுதலைப்   பற்றாளனின்   சாவு   என்பது   இன்றைய   சூழலில்   எமதினத்திற்கு
பெரும்   இழப்புக்களிலொன்றாகும்.   பாவலர்   இன்குலாப்   ஐயாவின்   இழப்பானது   எமக்கு   பெரும்   வேதனையை
ஏற்படுத்தியிருக்கும்   அதேவேளை   இயற்கையின்   நியதியில்   அனைத்து   உயிர்களும்   ஒர்   நாள்   மறையத்தான்
செய்யும்   என்பதற்கமைய   அவரின்   சாவிலும்,   பிரிவுத்   துயரிலும்   மீண்டெழுந்து   எங்கள்   விடுதலைக்கான
பணிதொடர்கின்றோம்.     இவரின்     இழப்பால்     துயரில்     நின்று     கொண்டிருக்கும்     குடும்பத்தினரோடும்,
இனப்பற்றாளர்களுடனும், நண்பர்களுடனும் எமது துயரினையும் பகிர்ந்து கொள்கின்றோம்.
‘ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ”
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

inkulap-page-001

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here