ட்ரம்பை அதிபராக ஏற்கமாட்டோம்:அமெரிக்காவில் போர்க்கொடி!

0
359
aak6eiuஅமெரிக்க அதிபராக ட்ரம்பை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் நெருக்கட ஏற்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாளி கிளின்டனை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஜனவரி 20 ஆம் தேதி ட்ரம்ப் அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் அவரை அதிபராக ஏற்கமுடியாது எனக் கூறி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.மன்ஹாட்டன், சிகாகோ, டெக்ஸாஸ் உள்ளிட்ட பல இடங்களில் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.fotorcreated-37
கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவர்கள் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் ட்ரம்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ட்ரம்ப்பின் இஸ்லாமியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த அகதிகள் மீதான கருத்தே அவருக்கு எதிரான போராட்டங்களுக்கு காரணம் என கூறப்படுகிறது.மேலும் பல்வேறுt பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவரை, பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்தவரை அதிபராக ஏற்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரவித்தனர்.பல இடங்களில் போராட்டம் நடத்தியவர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து காவல்துறையினர் விரட்டினர்.பதவியேற்பதற்குள்ளேயே ட்ரம்ப்க்கு எதிராக வெடித்துள்ள போராட்டம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here