கேணல் சாள்ஸ் உள்ளிட்ட 4 மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்று!

0
462

விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 10 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

05.01.2008 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில், படைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (சண்முகநாதன் ரவிசங்கர் யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுகந்தன் (சிவபாலன் கிரிதரன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் காவலன் (சின்னத்தம்பி கங்காதரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வீரமாறன் (பரராஜசிங்கம் சுதன் – முல்லைத்தீவு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

காலநதி ஓட்டத்தில் கரைந்திட முடியாதகாவியபெரு வரலாறு கேணல் சாள்ஸ்.

எல்லைக்கு வெளியேதான்
இவனின் உறைவிடம்
அதுவே மறைவிடமும்கூட

எத்தனை எழுதினும்
எழுத்திலோ பேச்சிலோ
அடக்கிட முடியா
உன்னத மனிதன் இவன்.

கற்பனை என்றொரு
வார்ததை உண்டு தமிழில்.
அத்தனை கற்பனையும்
கடந்த வீரம் இவனது.

இவன் காற்றின் வீச்சில்
கனல் எடுக்க தெரிந்த
கந்தக வித்தை தெரிந்தவன்.

எத்தனை காலம் இவன்.
மூச்சை அடக்கி கொண்டே
பேரினவாத மூளைக்குள்.
துளையிட்டு போய் அமர்ந்திருந்தவன்.

வெளியே தெரிந்த
பேச்சுவார்த்தைகளுக்கும்
சமாதான ஒப்பந்தங்களுக்கும் பின்னால்
எங்கோ ஒரு மூலையில்
சிரித்தபடியே சாள்ஸின்
வெற்றி நின்றிருந்தது.

அண்ணையின் கண்அசைவு
ஒவ்வொன்றையும் இவனால்
முழுதாக மொழிபெயர்க்க முடிந்திருந்தது.
அதனால்தான் இவனால்
எரிமலையின் குழம்புமழையையும்
பூமிஅதிர்வின் பிரளயதையும்
வானத்தில் இருந்து
நெருப்பு மழையையும்
நிகழ்த்த முடிந்த அக்கினிகுஞ்சு இவன்.

காலநதி ஓட்டத்தில்
கரைந்திட முடியாத
காவியபெரு வரலாறு இவன்.
தலைதாழ்த்தி வணங்குகின்றோம்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here